நியூயார்க்: இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் யாரை ஆட்சியில் அமர்த்த நிதி ஒதுக்கப்பட்டது என்ற கேள்வியை அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு யுஎஸ்எய்டு அமைப்பு கலைக்கப்பட்டது. இதை எலான் மஸ் தலைமையிலான அரசாங்க செயல்திறன் துறையின் அறிவுறுத்தல் பேரில் டிரம்ப் கலைத்து உத்தரவிட்டார். இந்த சூழலில் யுஎஸ்எய்டு அமைப்பு சார்பில் இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அதிபர் டிரம்ப் கூறுகையில்,’இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா எதற்காக ரூ.181 கோடி நிதியை ஒதுக்க வேண்டும்.
அவர்கள் அமெரிக்காவுக்கு வரிமேல் வரி போட்டு அதிக பணம் வைத்துள்ளனர். அப்படி இருக்கும் போது பைடன் நிர்வாகம் எதற்காக ரூ.181 கோடிநிதி ஒதுக்கியது?. ஒருவேளை அவர்கள் இந்தியாவில் வேறு யாரையாவது தேர்ந்தெடுக்க முயற்சித்து இருக்கிறார்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன். இதை நாம் உடனே இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். இந்தியத் தேர்தலுக்கு ரூ.181 கோடி, வங்கதேச அரசியலை வலுப்படுத்த ரூ.251 கோடி என்று வாரி வழங்கி இருக்கிறார்கள். ஆசியா நன்றாக இருக்கிறது. நமது மக்களின் வரிப்பணத்தை, நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதில்லை. இவை ஒன்றிரண்டு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டியல் மிக நீளமானது’ என்றார்.
The post வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பணம்; இந்தியாவில் யாரை ஆட்சியில் அமர்த்த நிதி ஒதுக்கப்பட்டது? அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி appeared first on Dinakaran.