மும்பை: வங்கி சேவை, நிதி சேவை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இன்னும் சில முக்கிய விஷயங்கள் சார்ந்து நாட்டு மக்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான தகவலை வழங்கும் நோக்கில் வாட்ஸ்அப் சேனலை அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கியின் மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறுஞ்செய்தி, தொலைக்காட்சி – செய்தித்தாள் – டிஜிட்டல் தளங்களில் விளம்பரம் மூலமாக இந்த விழிப்புணர்வை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் சேனல் மூலம் இன்னும் பரவலான மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க முடியும் என ஆர்பிஐ எதிர்பார்க்கிறது.