சென்னை: சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக பிப்.24 முதல் 28 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
பிப்.24-ல் மாதவரம், ஆர்.கே. நகர், திருவிக நகர், கிண்டி, மயிலாப்பூர், தி.நகர் பகுதிகள், பிப்.25-ம் தேதி மாதவரம், பெரம்பூர், திரு.வி.க நகர்- வ.உ.சி நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகள், பிப். 26-ம் தேதி மாதவரம், எழும்பூர், அம்பத்தூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகள், பிப்.27-ம் தேதி மாதவரம், ஆர்.கே.நகர், அண்ணா நகர், எழும்பூர், மயிலாப்பூர், விரு கம்பாக்கம் திட்டப்பகுதிகள், 28-ம் தேதி மாதவரம், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், தி.நகர், சைதை திட்டப் பகுதிகளில் முகாம் நடைபெறும்.