புதுடெல்லி: இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்துகொண்டதை ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமானஅசாதுதீன் ஒவைசி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் பல்வேறு சந்தர்ப்பங்களில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அதோடு, 'வெறுப்பு மற்றும் வன்முறை சக்தி' என்று கூறி, வல்லபாய் படேல் தடை செய்த ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையது. இத்தகைய அமைப்பின் மாநாட்டில் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்து கொண்டது துரதிருஷ்டவசமானது. இந்திய அரசியலமைப்பு என்பது நீதித் துறையின் சுதந்திரத்தையும், பாரபட்சமற்ற தன்மையையும் எதிர்பார்க்கிறது என்பதை உங்களுக்கு நினைவூட்டுவது மிகவும் முக்கியமானது.