சென்னை: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – விக்ரமை கொல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் தேடிக் கொண்டிருப்பதுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ஒரே இரவில் நடக்கும் கதை என்பதை ட்ரெய்லரில் வரும் வசனங்கள், காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், ஜி.வி.பிரகாஷின் வெறியூட்டும் பின்னணி இசை எதிர்பார்ப்பை தூண்டுகின்றன. முழு மாஸ் ஆக்‌ஷன் அவதாரம் விக்ரமுக்கு சிறந்த கம்பேக் ஆக இருக்கும் என்று நம்பலாம். ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ ட்ரெய்லர் வீடியோ: