சென்னை: விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தால் ரூ.350 கோடி அளவில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, பேச்சுவார்த்தைக்கு அழைத்து விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் தமிழக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங்களில், விசைத்தறிகள் மூலம், சுமார் 7 லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, விசைத்தறி கூலிகள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.