விஜய்யின் ‘கோட்’ படத்தின் வசூல் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெளிவாக பதிலளித்திருக்கிறார்.
‘டிராகன்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டியொன்று அளித்துள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. அந்தப் பேட்டியில் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில் அர்ச்சனா கல்பாத்தி “450 கோடி வசூல் என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் திரையரங்கைத் தாண்டி உள்ள வியாபாரம் எதுவும் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் பெரிதாக இருக்கும்.