சென்னை: தவெக போஸ்டர் சர்ச்சை விவகாரம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்யின் கோடான கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தையொட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி.சரவணன் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதில், “தளபதி அவர்களை அழைத்து வரும், தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் அரசியல் ஆசான், தவெக பொதுச்செயலாளர், வருங்கால தமிழக முதல்வரை வரவேற்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.