சென்னை: நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும். நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள். அவர் முதலில் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஷயல் பேசியதாவது: ”மொழி திணிப்பு என்பதை ஒரு சட்டமாக கொண்டு வரலாம். ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அதை கொண்டு வரமுடியாது. மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி.