‘விஜய் 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குடியரசு தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. தீவிர அரசியலில் ஈடுபடும் முன்பு, தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதனை ஹெச்.வினோத் இயக்க கே.வி.என் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்பையும் சென்னையில் துவங்க பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.
தற்போது குடியரசு தினமான ஜனவரி 26 அன்று ‘விஜய் 69’ படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.