உலகளவில் ‘விடாமுயற்சி’ படத்தின் மொத்த வசூலை முந்தி சாதனை புரிந்திருக்கிறது ‘டிராகன்’.
2025-ம் ஆண்டு வெளியான படங்களில், உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தில் இருந்தது ‘விடாமுயற்சி’. அஜித் படம் என்பதால் முதல் 3 நாட்கள் வசூல் அதிகப்படியாக இருந்தது. மேலும், சிங்கப்பூரில் ‘விடாமுயற்சி’ நல்ல வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், படத்தின் பொருட்செலவை ஒப்பிடும் போது, எதிர்பார்த்த வசூல் இல்லை என்கிறார்கள் திரையுலகில்.