வாஷிங்டன்: விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்போர் ஆகிய இருவரும் ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்றநிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி உள்ளனர். அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருவரும் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் விண்வெளியில் அதிக நேரம் நடைபயணம் செய்த பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். சுனிதா 5மணி நேரம் 26நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார். 9வது முறையாக விண்வெளியில் நடந்துள்ள சுனிதா வில்லியம்ஸ் இதுவரை விண்வெளியில் மட்டும் 62மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்திருக்கிறார். புட்ச் வில்மோருக்கு இது ஐந்தாவது நடைபயணமாகும்.
இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் முன்னாள் விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சனின் மொத்த விண்வெளி நடைபயணமான 60 மணி நேரம் 21 நிமிடங்களை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post விண்வெளியில் அதிக நேரம் நடந்து சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை appeared first on Dinakaran.