சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, பொன்னேரி தாலுகாவை பிரிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். நிதியமைச்சர் நிதி ஒதுக்கினால், நிச்சயம் பிரிக்க வாய்ப்பு உள்ளது என எம்.எல்.ஏ. சுதர்சனம் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: வட்டங்கள் பிரிப்பதற்கான கோரிக்கைகள் பல வந்திருக்கின்றன. நிதி நிலைக்கு ஏற்ப இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் தெரிவித்தார்.
செங்கோட்டையன்: இதை தொடர்ந்து பவானிசாகர் ஆற்றுப் பகுதியில் சாயப்பட்டறை இயங்க வழங்கப்பட்ட அனுமதியை அரசு திரும்பப் பெற வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கோரிக்கை முன்வைத்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: பவானி ஆற்றின் கரையில் இருந்து 500 மீ தூரத்தில், சாயப்பட்டறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்தும் சில புகார்கள் வந்துள்ளன. ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேறுவது சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. விதிகளை மீறும் ஆலைகள் மீது கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் பாபு: மலையம்பட்டு கிராமத்தில் குழந்தைகள் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும், காலியாக உள்ள பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் கீதா ஜீவன்: அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார்.
The post விதிகளை மீறும் சாயப்பட்டறை ஆலைகள் மீது கடுமையான நடடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!! appeared first on Dinakaran.