சென்னை: சென்னையில் விநாயகர் சிலை கரைப்பால் கடற்கரைகளில் 2 நாட்களாக கரை ஒதுங்கிய 140 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மாநகரில் 1800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிலைகளை கரைக்க சென்னையில் பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம், காசி மேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூரில் உள்ள பாப்புலர் எடைமேடை பின்புறம் மற்றும் யுனிவர்சல் கார்போரண்டம் தொழிற்சாலைக்கு பின்புறம், நீலாங்கரை- பல்கலைநகர், எண்ணூர்- ராமகிருஷ்ணா நகர் ஆகிய 6 இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.