மதுரை: விமானங்களை நோக்கி கண் கூச செய்யும் திறன் கொண்ட லேசர் ஒளி, பிளாஷ் லைட் அடிப்பவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் மதுரை விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் மூலம் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டுமல்லாமல் வெளிநாட்டிற்கு நேரடியான விமான போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓடுதளம் அருகே விமானம் இறங்கும் போதும், மேலேழும்பும் போதும் லேசர் ஒளி, ஃபிளாஷ் லைட் வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
புகாரின் அடைப்படையில் விமானங்களை நோக்கி லேசர் ஒளி, பிளாஷ் லைட் அடிப்பவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விமான நிலையத்துக்கு வெளியே தெற்கு சுவர் அருகிலும், பரம்புப்பட்டிக்கு அருகிலும் சிலர் வேடிக்கை பார்க்க நிற்கின்றனர். பொதுமக்கள் சிலரின் செயல்களால் விமானிகள் விமானங்களை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்கள் புகார் தெரிவிக்க (0452-2671168, 0452-2342496) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
The post விமானங்களை நோக்கி லேசர் ஒளி, பிளாஷ் லைட் அடிப்பவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.