துபாய்: துபாய்க்கு வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேலைக்காக வந்தார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவர் கடந்த 5 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு செல்லாமல் பணிபுரிந்து வந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், அவரை ஊருக்கு வரசொல்லி கட்டாயப்படுத்தினர். ஆனாலும் அவர் செல்லவில்லை. அதனால் அவரை அழைத்து வர சகோதரர் துபாய்க்கு வருவார். ஆனாலும் அவர் விமானத்தில் ஏறாமல் திரும்பி விடுவார். இது தொடர் கதையானது. இதனால் அவரது குடும்பத்தினர் கவலையடைந்தனர். இதையடுத்து அந்த வாலிபரை மருத்துவமனையில் சேர்த்து டாக்டர்கள் பரிசோதித்தனர். அவர் ஏரோபோபியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த ஏரோபோபியா என்பது ‘பறக்கும் பயம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயால் உலகில் ஒருசிலர் பாதிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதீத பயத்தினால் ஏற்படுகிறது. அதாவது விமான பயணத்தில் பாதுகாப்பு மற்றும் வசதி இருந்தபோதிலும், பயம் காரணமாக விமான பயணத்தை தவிர்த்து வந்துள்ளார். சமீபத்தில் அந்த வாலிபர், சொந்த ஊர் திரும்ப துபாய் விமான நிலையத்துக்கு வந்தார். திடீரென பயத்தில் அவர் அங்கும், இங்குமாக ஓடுவதை விமான நிலைய அதிகாரிகள் கண்டனர். இதையறிந்த அதிகாரிகள், அவரின் மனநிலையை தேற்றி அமைதிப்படுத்தினர். பின்னர் அவரை விமானத்தில் ஏற்றி சொந்த ஊர் அனுப்பி வைத்தனர். இதற்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
The post விமானத்தில் பயணம் செய்ய பயம் சொந்த ஊர் திரும்பாத வாலிபர் appeared first on Dinakaran.