சென்னை: விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் 13 ஜோடி ரயில்களில் பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாகவும், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் கூடுதலாக பெட்டிகள் சேர்க்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இந்த மாற்றம் பிப்.21-ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.