தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.70,160-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கம் விலை கடந்த மார்ச் 16-ம் தேதி ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து கடந்த 10-ம் தேதி ஒரு பவுன் ரூ.68,480, கடந்த 11-ம் தேதி ரூ.69,960 என அதிகரித்தது.