கரூர்: கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி 5-வது வார்டு தளவாபாளையம் பகுதியில் இன்று (டிச. 28ம் தேதி) பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் தலைமை வகித்து மனுக்களை பெற்று பேசியது: இங்கு பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குகள் தீர்வு காணப்படும். நான் இங்கு வந்ததன் நோக்கம். விளிம்பு நிலையில் உள்ள பட்டியலின மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும். பட்டியலின மக்களின் தேவைகளை நிறைவேற்ற அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது.