விழுப்புரம்: பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; பொங்கல் பண்டிகையை முடித்து பயணிகள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிச்செல்ல ஏதுவாக இன்று, நாளை நாளை மறுநாள், மற்றும் 20ம் தேதி ஆகிய நான்கு நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் கோட்டம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 19ம் தேதி பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்க வாய்ப்பு உள்ளதால் அன்றைய தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே 17.01.2025 மற்றும் 18.01.2025 ஆகிய தேதிகளில் திட்டமிட்டு இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The post விழுப்புரம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.