விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூரில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். விழுப்புரத்தில் தென்பெண்ணை ஆறு திருக்கோவிலூர் வழியாக சென்று கடலூர் மாவட்டம் கடலில் கலக்கிறது. தென்பெண்ணை கிளை ஆறு, மலட்டாறு ஆகும். இந்த மலட்டாற்றில் தற்போது அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியிலுள்ள பார்பி நகரை சேர்ந்தவர் சிவசங்கரி. இவரின் தங்கை அபிநயா, உறவினர் ராஜேஷ் மற்றும் இவர்களுடன் மேலும் 3 பேர் என மொத்தம் 6 பேர் மலட்டாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சிவசங்கரி ஆற்றில் ஆழமான இடத்திற்கு சென்றதால் அடித்துச் செல்லப்பட்டார்.
அவரை காப்பாற்ற முயன்ற தங்கை அபிநயா, உறவினர் ராஜேஷ் ஆகியோரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். கரையிலிருந்த மீதி 3 பேர் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சிக்கும்போது சிவசங்கரி ஆற்றிலே உயிரிழந்தார். மேலும் அபிநயா, ராஜேஷ் ஆகியோரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆற்றில் குளிக்க சென்று 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post விழுப்புரம் மாவட்டம் அரசூரில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.