விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகே மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் டைடல் பார்க் அமைக்க கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்பு வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகில் மினி டைடல் பார்க் (NEO TIDEL PARK) கட்டப்பட்டு, கடந்த 17-02-2024-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அலுவலகங்கள் அமைக்க கட்டப்பட்டுள்ள 63,000 சதுர அடியுள்ள இடத்தில் 30 சதவீதமான இடங்களில் மட்டுமே இதுவரை நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளன. திறப்பு விழா கண்டு 10 மாதங்களுக்கு மேலாகியும் 70 சதவீதமான இடத்தில் எவ்வித நிறுவனமும் தொழில் தொடங்கவில்லை.