மும்பை: நாட்டில் எந்த சக்தியாலும் விவசாயிகளின் குரலை நசுக்க முடியாது. விவசாயிகளின் பொறுமையை சோதித்தால் தேசம் பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று மேடையிலேயே மத்திய விவசாயத் துறை அமைச்சரை எச்சரித்துள்ளார் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.
மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மும்பையில் நேற்று (டிச.03) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். அதே மேடையில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் இருந்தார்.