விஷாலுக்கு நாயகியாக நடிக்க துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
‘மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரவி அரசு படத்தில் நடித்து, தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் விஷால். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நடிப்பதற்கு துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனக் கூறப்படுகிறது.