விஷாலின் உடல்நிலை குறித்து அவரது திரையுலக நண்பர்கள் அனைவரும் அக்கறை காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற ‘மதகஜராஜா’ படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் விஷால். அப்போது அவருக்கு ஏற்பட்ட கை நடுக்கம், கண் பார்வை பிரச்சினை உள்ளிட்ட அனைத்துமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணையத்தில் Getwell Soon Vishal என்று பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கினார்கள்.