சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால், ஆம்பள, ஆக்‌ஷன், மதகஜராஜா படங்களில் நடித்துள்ளார். இதில் மதகஜராஜா, 12 வருடத்துக்குப் பிறகு கடந்த பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டானது இந்தப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து சுந்தர். சி இயக்கத்தில் விஷால் மீண்டும் நடிக்கிறார். இந்தப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகக்கூறப்படுகிறது. விஷால் சம்பளம் மட்டுமே ரூ.30 கோடி என்கிறார்கள். இதில் காமெடி வேடத்தில் நடிக்க சந்தானத்திடம் பேசி வருகின்றனர். அவர் மறுத்தால் வடிவேலு நடிப்பார் என்று கூறப்படுகிறது.
பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.அருண்குமார் வழங்க, அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்த மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ படம் முடிந்துவிட்டது.