
’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, அப்படங்கள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. இதனால் விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஒருவரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் படத்தினை முடித்துவிட்டு, விஷ்ணு எடவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விக்ரம். இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். இந்தக் கூட்டணி குறித்த அறிவிப்பு, விஷ்ணு எடவன் இயக்கி வரும் ‘ஹாய்’ படத்தின் பணிகள் முடிந்தவுடன் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

