சென்னை: விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சென்னையில் நாளை நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இந்து சமுதாய மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நாளை பொதுக்குழு கூட்டம் 22.03.2025 நடத்த திட்டமிட்டிருந்தது. பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்காததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் தென்சென்னையில் நாளை நடக்கிறது. நங்கநல்லூரில் இந்து சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தி நாளை மாலை 5.30 மணி முதல் 10 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெறும் என உத்தரவிட்டது.
The post விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சென்னையில் நாளை நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.