வீடு, ஃபிளாட் மற்றும் நிலம் வாங்குவதுதான் ரியல் எஸ்டேட் முதலீடு எனப்படுகிறது. அப்பா ஒரு வீடு வாங்கி வைத்துள்ளார். இரண்டு பிள்ளைகள் இருந்தால், அவர்கள் வளர்ந்து திருமணம் செய்யும்போது அவர்கள் இருவருக்குமே தனித்தனியாக ஒரு வீடு தேவைப்படுகிறது. எனவே வீடு வாங்குவது என்பது ஒவ்வொரு குடும்பத் தலைவன், தலைவிக்கும் கனவுதான்.
வாடகை வீட்டில் வசிக்கும்போது, நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறோமா என்பது கேள்விதான். வீட்டு சொந்தக்காரர் எப்போது காலி செய்யச் சொல்வார் என்று தெரியாது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகள்.எனவே, நடுத்தர மக்கள் கடன்பட்டாவது ஒரு வீட்டை வாங்கிவிடவேண்டும் என்று துடிப்பது இயல்புதான்.