வீடு வாங்க விழைவோர் முதலில் எந்தப் பகுதியில் வீடு வாங்குவது என தீர்மானிக்க வேண்டும். அதற்கான செக் லிஸ்ட் குறிப்புகள் இவை…
> உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த வீடு இருக்கும் இடம் ஏற்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அலுவலகத்துக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் அந்தப் பகுதியிலிருந்து அலுவலகம் செல்ல போதிய போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். இந்த அடிப்படையை மனத்தில் கொள்ளவில்லை என்றால் தினசரி வாழ்க்கையே சிலருக்கு நரகம் ஆகிவிடும். ஏனென்றால், பயணிப்பது என்பது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி.