லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், 'கூலி'. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் என பலர் நடித்துள்ளர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
இந்தப் படம் தொடங்கியதும், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, தூள் கிளப்பிடலாம் என்று சொன்னார். நான், ‘இது 1950 மாடல். பல லட்சம் கிலோமீட்டர் ஓடியிருக்கு. பார்ட்ஸ் எல்லாம் மாத்தியிருக்காங்க. ரொம்ப ஆடவச்சிராதீங்க, பார்ட்ஸ் கழன்றிடும்'னு சொன்னேன்.