புதுடெல்லி: “இந்தியப் படைகள் தனது அற்புதமான வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளன.” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ள எல்லை சாலை அமைப்பின் சார்பில் 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 50 எல்லை சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நேற்றிரவு இந்தியப் படைகள் தங்கள் துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்தி ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்திய ராணுவம் துல்லியம், விழிப்புணர்வு மற்றும் உணர்திறனுடன் நடவடிக்கை எடுத்துள்ளது.