‘வீர தீர சூரன்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து விக்ரம் பதிலளித்துள்ளார்.
‘வீர தீர சூரன்’ திரைப்படம் தாமதமாக வெளியானாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை முன்வைத்து படக்குழுவினர் தமிழக திரையரங்குகளுக்கு சென்று மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அதில் மக்கள் மத்தியில் பேசும்போது, ‘வீர தீர சூரன்’ படத்தின் முதல் பாகம், 3-ம் பாகம் உருவாகும் என்று விக்ரம் தெரிவித்திருக்கிறார்.