ஊரையே கைக்குள் வைத்திருக்கும் இரண்டு மிகப் பெரிய அப்பா – மகன் ரவுடிகள் ரவி (பிருத்விராஜ்) – கண்ணன் (சுராஜ் வெஞ்சரமுடு). தன் கணவனை காணவில்லை என்று இவர்களின் வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்யும் ஒரு பெண்ணும் அவரது 8 வயது மகளும் காணாமல் போகின்றனர். ஏற்கெனவே பல வழக்குகள் அவர்கள் மீது இருக்கும் நிலையில், இந்த வழக்கை வைத்து அவர்கள் இருவரையும் அன்று இரவுக்குள் என்கவுன்ட்டர் செய்ய நினைக்கிறார் எஸ்.பி அருணகிரி (எஸ்.ஜே.சூர்யா).
தங்களை எஸ்.பி கொல்லும் முன்பே அவரை கொன்றுவிட வேண்டும் என்று திட்டமிடும் ரவி, இதை செய்ய சரியான ஆள் தன்னிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்து தற்போது ஒதுங்கி மளிகை கடை வைத்திருக்கும் காளியிடம் (விக்ரம்) போய் உதவி கேட்கிறார். தன் குடும்பத்தின் நிலையை எண்ணி எவ்வளவோ மறுக்கும் காளி, ஒருகட்டத்தில் ரவி தன் காலில் விழுந்ததும் மனம் இறங்கி ஒப்புக் கொள்கிறார். இதன் பிறகு அந்த இரவு முழுக்க என்ன நடந்தது என்பதே ‘வீர தீர சூரன்: பாகம் 2’