தாம்பரம்: அரக்கோணத்தில் இருந்து கார்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் ஒன்று பராமரிப்புப் பணிக்காக, 3 வாரங்களுக்கு முன்பு தாம்பரம் யார்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பராமரிப்புப் பணி முடிந்து நேற்று இரவு 7.00 மணிக்கு அந்த ரயில் அரக்கோணத்துக்கு செல்வதற்காக எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் மெயின் லைனுக்கு இயக்கப்பட்டது.
அப்போது, 26 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலின் 5 பெட்டிகள் மெயின் லைனுக்குள் வந்த நிலையில் இடையில் இருந்த 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று தடம் புரண்ட பெட்டியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.