சென்னை: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்தது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டது. அப்போது கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.65 வரை விலை உயர்ந்திருந்தது. தற்போது இச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று கிலோ ரூ.10 ஆக விலை வீழ்ச்சி அடைந்திருந்தது.