அமெரிக்கா: வெனிசுலாவிலிருந்து எண்ணைய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 விழுக்காடு வரிவிதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெனிசுலா மீது அமெரிக்கா 2வது தவணையாக கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் நீண்டகாலமாக நீண்டகாலக நடந்து வரும் சூழலில் அதிக அளவில் குற்றவாளிகளையும்,போதை பொருளையும் அமெரிக்காவிற்கு கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
ஏற்கனவே வெனிசுலா மீது கூடுதல் வரிகளை அமெரிக்கா விதித்திருந்த நிலையில் தற்போது 2வது தவணையாக 25 விழுக்காடு கூடுதல் வரியை அறிவித்துள்ளது. வரும் 2 ஆம் தேதி முதல் புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வரும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே வெனிசுலாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சட்ட விரோத குடியேறிகளை அமெரிக்கா முகாம்களுக்கு நாடு கடத்தியதும் இரு நாடுகளுக்கு இடையே மோதலை அதிகரித்துள்ளது.
The post வெனிசுலாவிலிருந்து எண்ணைய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 விழுக்காடு வரிவிதிக்கப்படும்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.