“முடிவில்லாப் போர்களுக்கு” எதிராகப் பிரசாரம் செய்த, ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்காவின் கடந்த கால முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்த மற்றும் “அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை” என்ற வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவதாக உறுதியளித்த ஒரு அதிபர், இப்போது தனது அதிபர் பதவியையே பொருளாதாரம் சீர்குலைந்துள்ள மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை பல தசாப்த கால சர்வாதிகாரத்தால் சிதைக்கப்பட்டுள்ள ஒரு தென் அமெரிக்க நாட்டை மறுசீரமைப்பதில் பணயம் வைத்துள்ளார்.

