ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில், ‘‘வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மணி, 6 மிமீ சுற்றளவும், 4.7 மிமீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது’’ என பதிவிட்டுள்ளார்.
The post வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு appeared first on Dinakaran.