கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே வெம்பூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் அஞ்சல் அட்டை அனுப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், வெம்பூரில் சுமார் 2700 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. 2700 ஏக்கர் என்றால், வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, விளாத்திகுளம் வட்டம் பட்டிதேவன்பட்டி ஆகிய கிராமங்களில் மானாவாரி நிலங்களை கையகப்படுத்தப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.