சென்னை: எம்புரான் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தை தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரியுள்ளார்.
மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாறன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எல்2: எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியானது. இந்தப் படம், நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு அங்கு நடந்த கலவரத்தை குறித்து பேசுவதால் வலதுசாரி ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளது. .