‘வான்வழி தவிர்த்து, சென்னையிலிருந்து- பெங்களூருக்கு 30 நிமிடத்தில் அல்லது சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணிநேரத்தில் பயணிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?’ ரயில் பயணத்திற்கு ஆகும் செலவை விட சற்று கூடுதலாக, அதேசமயம் விமானத்தை விட வேகமாக (சுமார் 1000 கிமீ வேகத்தில்) நிலத்தில் செல்லக்கூடிய ஒரு பயண அமைப்பாக ஹைப்பர்லூப் விவரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஹைப்பர்லூப் எப்போது சாத்தியம்?