வெற்றிமாறன் கதையை கவுதம் மேனன் இயக்க, அதில் நாயகனாக நடிக்கவுள்ளார் ரவி மோகன். இதனை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் தனது அடுத்த படத்தை கவுதம் மேனன் இயக்கவுள்ளார் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் விஷால். இதனைத் தொடர்ந்து கவுதம் மேனன் – விஷால் புதிய கூட்டணி என பலரும் கருதினார்கள். இப்படத்தை கே.பி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். தற்போது இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.