சென்னை: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: சட்டப்பேரவையில் முக்கிய பிரச்சனை குறித்து பேசுவதற்கு சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்து விட்டார். எதிர்க்கட்சி தலைவருக்கு நாட்டு மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு முழு உரிமை உண்டு. நத்தம் விஸ்வநாதனுக்கு 10 நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறார்கள். ஒரு துறையின் பிரச்சனையை எப்படி 10 நிமிடத்தில் பேசி தீர்க்க முடியும்.. கிட்டத்தட்ட 7, 8 ஆண்டு காலம் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர். கோடைகாலத்தில் மின்சாரம் எவ்வளவு தேவைப்படுகிறது.
அதை எப்படி சரி செய்வது என்ற ஆக்கப்பூர்மான கருத்துக்களை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் நேரம் கொடுக்க மறுக்கிறார்கள். . நயினார் நாகேந்திரன் எங்களிடம் எப்போதும் பேசுபவர் தான். பாம.க எம்எல்ஏ கூட வந்து பேசி விட்டு செல்கிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் வருகிறார் பேசுகிறார். போகிறார். லாபியில் நாங்கள் எல்லோரும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். வேறு ஒன்றும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post வெளிநடப்பு செய்தது ஏன்?.. எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.