சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நுழைவாயில்களில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாதது பல்வேறு வழிகளில்
பின்னடைவை ஏற்படுத்துகிறது. வெளி நபர்கள் நடைபயிற்சிக்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும். பல்கலை.யில் இரவு நேரத்தில் அனைத்து மின் விளக்குகளும் எரிவதை உறுதிப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். பல்கலை. வளாகத்தில் 24 மணி நேரமும் ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post வெளி நபர்கள் நடைபயிற்சிக்காக அண்ணா பல்கலை.க்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம் appeared first on Dinakaran.