நீதிமன்றத்தில் வழக்கு, உட்கட்சிக்குள் உரிமைக் குரல்கள்… இதையெல்லாம் ‘மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என வைத்துவிட்டு 2026 தேர்தலுக்கான திண்ணைப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கிறது அதிமுக.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அதன் மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அண்மையில் நடந்தது.