வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொண்ட சந்திப்பு காரசார விவாதத்துடன் முடிந்தது, பேச்சுவார்த்தையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக் கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அந்த சந்திப்பின்போது துணை அதிபர் ஜேடி வேன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.