சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம்: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன.