புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் 11ம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் வழங்கியுள்ளனர். 3 பேரும் வீட்டில் இல்லாததால் அவர்களது குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் சம்மனை வழங்கினர்.
The post வேங்கைவயல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.