வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த துணை ஆட்சியர் சிவக்குமார் உயிரிழந்தார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய சேராவூரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(46).
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சர்க்கரை ஆலையில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வந்தார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, கொடைக்கானல் கோட்டாட்சியராகவும் பணிபுரிந்துள்ளார்.